இந்திய குடிமக்களுக்கு விசா வழங்கும் போது திறமையின் அடிப்படையில் மட்டுமே அது வழங்கப்படும் என கருதுவதாக டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் தங்களது கடந்த ஐந்தாண்டு கால சமூக வலைதள பதிவுகளையும், username உள்ளிட்ட தரவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இது அமெரிக்காவின் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என கருதினாலும், இந்தியர்களுக்கு திறமையின் அடிப்படையில் விசா வழங்குவதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார். இந்தியர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு உதவி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : சென்னை ரூ.489.22 கோடியில் அமைக்கப்படும் புதிய சாலைகள்..