சென்னையில் சுமார் 489 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் புதிய சாலைகள் அமைக்கும் பணியை ஜுலை 31 ஆம் தேதிக்குள் முடிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம், நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், சிறப்புத் திட்ட நிதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூவாயிரத்து 987 சாலைகள் அமைக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. 650 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் இந்த புதிய சாலைகள் ஏற்கெனவே உள்ள பழைய சாலைகளை அகழ்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படுவதால், சாலைகளை மில்லிங் செய்த 5 நாட்களுக்குள் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு..