Also Watch
Read this
By: Manigandan Raja

கருணாஸ் உருக்கம் :
நடிகர் கருணாஸ் தன்மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவண்டில் தனுஷை மற்றும் ஜிவி பிரகாஷ் குமாரை பற்றி பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அவர் பேசுகையில் :
“நான் தனுஷ் உடன் 16 ஆண்டுகளுக்கு பிறகு Kara படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறேன். அவருக்கு இந்தப் படத்திற்காக விருது கிடைத்தால், எனக்கும் ஒரு விருது வேண்டும்,” என்று நகைச்சுவையாக கூறினார்.
மேலும், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து பேசும்போது, “நான் அவரிடம் சென்று, ‘உங்களுடைய பெரிய சம்பளத்தை எங்களால் கொடுக்க முடியாது’ என்று நேராகச் சொன்னேன். அதற்கு அவர், ‘உங்களுக்கும் கென் (Ken) க்காக இந்தப் படத்தை நான் இலவசமாகவே செய்கிறேன்’ என்று கூறினார்,” என கருணாஸ் தெரிவித்தார்.
இந்த உரை நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே சிரிப்பையும் பாராட்டுகளையும் பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved