news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு
tv

Also Watch

tv

Read this

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

Karuppu

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karuppu trisha

த்ரிஷாவை "SOUTH QUEEN" என அறிமுகப்படுத்தியுள்ள படக்குழு :

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள "கருப்பு" திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, பிரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில் "சௌத் குயின்" என த்ரிஷாவை அறிமுகப்படுத்தி உள்ளனர். மேலும், வழக்கறிஞர் உடையணிந்து நீதிமன்றத்தில் அமர்ந்திருப்பதுபோல காட்சி இடம்பெற்றுள்ளது.

நடிகை சிம்ரனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது :

நடிகை சிம்ரனின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூப்பர் டாக்கீஸ் சார்பில் காசி விஸ்வநாதன், சமீர் பாரத் ராம் தயாரிப்பில் பாலு சர்மா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு "Teacher" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஒரு கிரைம் - த்ரில்லர் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த நடிகை :

மும்பையிலிருந்து புனே நோக்கி காரில் சென்ற பாலிவுட் நடிகை சோனாலி குல்கர்னி 5 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார். மும்பையின் மன்குர்த் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அவர், ஏறக்குறைய 5 மணிநேரமாக வாகனங்கள் ஒரு அங்குலம் கூட நகர முடியாத சூழல் நிலவியதாக தெரிவித்தார்.

“எக்ஸாம்” வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது :

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகி வரும் “எக்ஸாம்” வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த இணையத் தொடரில், துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 7 எபிஸோடுகள் உடைய ‘எக்ஸாம்’ வெப் தொடர் மே 15ம் தேதி முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

“நூறு சாமி” படத்தின் “அம்மா அம்மாதான்” பாடல் :

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் நூறு சாமி’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘அம்மா அம்மாதான்’ பாடல் இன்று வெளியாகும் என புரோமோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சசி உருவாக்கி வரும் இந்த படத்தில் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 43 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved