கனடாவில் வாழும் மக்களை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவுக்கு திரும்பி செல்லுமாறு காலிஸ்தான் ஆதரவாளர்கள் கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான அந்த வீடியோவில், கனடா தங்களின் சொந்த நாடு என்றும் கனடாவில் வாழும் தாங்கள் திரும்பி செல்லுங்கள் என்றும் வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார். அவர் பேசும் போதே அங்கிருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.