அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தின் நகல் தங்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை என ஹமாஸ் ஆயுதக்குழு விளக்கமளித்துள்ளது. திங்கட்கிழமையன்று டிரம்ப் அறிவித்த காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் ஏற்றுக்கொண்டதாக கூறிய நிலையில், ஹமாஸும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பாக பேசியிருக்கும் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட அமைதி திட்டம் குறித்து அமைப்பில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்தோலோசித்த பின் முடிவெடுக்கப்படும் என்றார்.