Also Watch
Read this
By: Manigandan Raja

லெபனானுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய வேண்டும் :
அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை போன்று, லெபனானுடனும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ((Anthony Albanese)) வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மத்தியில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகி வருகிறது. பதற்றமான பகுதியில் அமைதி ஏற்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் அவர் பேசினார்.
தென்சீனாவில் பிளாஸ்டிக் உற்பத்தி முடங்கும் நிலை :
போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, சீனாவில் எண்ணெய் விலை ஏற்றத்தை கண்டுள்ளதால் பிளாஸ்டிக் உற்பத்திக்கு பெயர்போன 'ஸங்முட்டு' ((Zhangmutou)) பகுதியில் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பொருட்களின் விலை 60 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், விலை குறைப்பிற்கு சாதகமான சூழல் தற்போது இல்லை எனவும்
தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹார்முஸ் நீரிணையில் மாற்று வழிகளை அறிவித்த ஈரான் :
ஹார்முஸ் நீரிணையின் பிரதான பகுதியில் கடல் கண்ணி வெடிகள் இருப்பதால் கப்பல் போக்குவரத்திற்கு பாதுகாப்பான மாற்றுப் பாதைகளை ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீரிணை தற்காலிகமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையின் முக்கியப் பகுதியில் கண்ணி வெடி அபாயம் உள்ளதால், கப்பல்களுக்கான புதிய நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைப் பின்பற்ற ஈரான் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே ஈரானின் 10 அம்ச கோரிக்கையின் அடிப்படையில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் பாகிஸ்தானில் தொடங்க உள்ளது குறிப்பிடதக்கது.
ஜப்பான்-உக்ரைன் கூட்டு முயற்சியில் புதிய டிரோன்கள் :
போர் சமயங்களில் ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனுடன் சேர்ந்து ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் நவீன டிரோன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான டிரோன்களை ஏவி ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் சுமார் 2 ஆயிரத்து 500 அமெரிக்கா டாலர் மதிப்புடைய டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் இரு நாடுகளும் களமிறங்கியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved