news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

UAE

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ட்ரோன் தாக்குதல்

அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை :

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடியாக ஈரானும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அபுதாபியில் உள்ள அணுமின் நிலையம் மீது திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசி அந்நாட்டு அதிகாரிகள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும் 4 அணு உலைகள் தொடர்ந்து இயங்குவதாகவும் கூறியுள்ளனர்.

மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர் பலி :

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சென்று இந்திய தூதரக அதிகாரிகள், தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டதோடு.

படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தனர். இது தொடர்பாக ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உயிரிழந்த ஊழியருக்கு தூதரகம் தரப்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும், ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனும் உள்ளூர் மக்களுடனும் தொடர்ந்து தூதரகம் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

யுஏஇ மீதான தாக்குதலுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் :

அபுதாபியில் உள்ள பராகா அணுமின் நிலையம் மற்றும் புஜைரா எண்ணெய் உற்பத்தி மண்டலம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு ஐநாவின் அணுசக்தி முகமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்கள் சர்வதேச அமைதிக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் இத்தகைய ஆளில்லா விமான தாக்குதல்கள், சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சாசனத்தின் வெளிப்படையான மீறல் என்றும் சாடியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் :

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று ட்ரோன் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 14 பிராந்தியங்களில் உக்ரைன் 556 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய ராணுவ தலைமை தளபதி பேச்சுக்கு பாகிஸ்தான் மிரட்டல் :

புவியில் ஒரு அங்கமாக பாகிஸ்தான் இருக்காது என்ற இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியின் பேச்சுக்கு பாகிஸ்தான் மிரட்டும் தொனியில் பேசியுள்ளது. பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதனுடன் அமைதியாக இணைந்து வாழ இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளது.

மேலும், பாகிஸ்தானை குறிவைக்கும் எந்தவொரு முயற்சியும், இந்தியாவிற்கு உத்தி ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஏற்புடையதல்ல எனவும், அப்படி நிகழ்ந்தால் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் மிரட்டியுள்ளது.

Related Link
அமெரிக்க அதிபரை தொடர்ந்து சீனா செல்லும் ரஷ்ய அதிபர் புதின்

அமெரிக்க அதிபரை தொடர்ந்து சீனா செல்லும் ரஷ்ய அதிபர் புதின்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மெகா திருப்பம்.. "நேரில் வாங்க" - மனம் மாறினார் இபிஎஸ்

1
10 mins agoshare
EPS 1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved