news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்
tv

Also Watch

tv

Read this

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்

புவனேஷ் குமார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புவனேஷ் குமார் கருத்து

பேட்டிங்கையும், அணியையும் சிறப்பாக கையாண்டார் :

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தனது பேட்டிங்கையும், அணியையும் களத்தில் பக்குவமாக கையாண்ட விதமே அவரது வெற்றிக்கு காரணம் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் கருத்து தெரிவித்தார்.

பேட்டி ஒன்றில் பேசிய புவனேஷ் குமார், ஓவ்வொரு வீரரின் பலத்தையும், அவர்களை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் துல்லியமாக வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய மைல்கல் :

பஞ்சாப் அணிக்கு எதிராக 58 ரன்களை குவித்து அசத்திய பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் மற்ற அணிகளை விட பஞ்சாப் அணியிடமே அதிக ரன்களை குவித்து மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளார்.

இதுவரை பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் அவர் ஆயிரத்து 217 ரன்களை குவித்துள்ளார். அடுத்ததாக சிஎஸ்கே-வுக்கு எதிராக ஆயிரத்து 174 ரன்களும், டெல்லி அணிக்கு எதிராக ஆயிரத்து 172 ரன்களும் குவித்து ரன் மெஷின் கோலி அசத்தியுள்ளார்.

சென்னை அணியின் சாதனையை முறியடித்த ஆர்சிபி :

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 200 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் அணி முறியடித்தது.

சென்னை அணி 43 முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்திருந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை கடந்ததன் மூலம் பெங்களூரு அணி 44 முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த முதல் அணி என்ற சாதனையை தன் வசமாக்கியது.

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

தாய்லாந்து ஓபன் - இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் :

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வியை தழுவி வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர். இந்தோனேசியாவின் லியோ ரோலி கர்ணாண்டோ - டேனியல் மார்ட்டின் இணை இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடியை 21-க்கு 12 மற்றும் 25-க்கு 23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்.

முன்னதாக இந்தியாவின் லக்சயா சென் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், தொடரில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது.

Related Link
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா?

1
56 mins agoshare
Netherland pm








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved