Also Watch
Read this
By: Manigandan Raja

தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் :
திருவள்ளுர் அடுத்த ஈக்காடு பெத்தேல்புறம் பகுதி அருகே இளைஞர்கள் எப்பொழுதும் கஞ்சா போதை குடிப்பதாகவும் அவர்களை கட்டுப்படுத்த போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தோம் புள்ளரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெத்தேல்புறம் பகுதி அருகே கஞ்சா குடித்துவிட்டு அங்கிருந்த பொது மக்களை கத்தியாலும் கட்டையாலும் சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சென்னை செங்குன்றம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புள்ளரம்பாக்கம் காவல் நிலையம் போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்றனர் அப்பொழுது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது
இதனிடையே ஈக்காடு பெத்தேல்புறம் பகுதியில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இது போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதற்கு போலீசாரே பொறுப்பேற்க வேண்டும்.
எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் உடனடியாக போலீஸ் இருந்து அதிகப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved