news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஐபிஎல் 2026 பஞ்சாப் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்த ஆர்சிபி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் 2026 பஞ்சாப் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்த ஆர்சிபி

பிளேஆஃப் சுற்றுக்கு அதிரடி முன்னேற்றம்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பஞ்சாப் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்த ஆர்சிபி

ஐ.பி.எல். போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முன்னேறி உள்ளது.

முக்கியமான வெற்றி
ஐபிஎல் 2026 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முக்கியமான வெற்றியை பதிவு செய்து உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி, பிளேஆஃப் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

பெங்களூரு vs பஞ்சாப்
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தெல் விரைவில் அவுட் ஆனாலும், விராட் கோலி 37 பந்துகளில் 58 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். பின்னர், அதிரடியாக விளையாடிய விக்ராந்த் ஐயர் 40 பந்துகளில் 73 ரன்கள் அடித்து பஞ்சாப் பந்து வீச்சாளர்களை திணறடித்தார். டிம் டேவிட் இறுதியில் 12 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்ததால் ஆர்சிபி 222 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கை நிர்ணயித்தது.

கடின இலக்கு, போராட்டம்
223 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் விரைவில் அவுட் ஆனதால் அணி அழுத்தத்திற்கு தள்ளப்பட்டது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் சில இளம் வீரர்கள் போராடியதால் போட்டி சுவாரஸ்யம் அடைந்தது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆர்சிபி பந்துவீச்சாளர்கள், பஞ்சாப்பை 20 ஓவர்களில் 199/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். 

தொடர் தோல்வி
ஆர்சிபி தரப்பில் ரஸிக் சலாம் 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் முக்கியமான ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 13 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் ஆர்சிபி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது.

Related Link
பிளே-ஆஃப் கனவு நனவாகுமா? தோனி வருவாரா?

பிளே-ஆஃப் கனவு நனவாகுமா? தோனி வருவாரா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
1 hr 3 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved