Also Watch
Read this
By: Manigandan Raja

நெதர்லாந்து பிரதமரின் கருத்துக்கு வெளியுறவுத்துறை மறுப்பு :
இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மத சிறுபான்மையினர் நலன் கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் கூறியதற்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா அனைவருக்கும் பேச்சுரிமையை உறுதி செய்யும் ஒரு துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ள வெளியுறவுத்துறைச் செயலாளர் சிபி ஜார்ஜ், இந்தியா பற்றிய புரிதல் இல்லாத நபர்களின் மேம்போக்கான விமர்சனம் இது எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு டோஸ் ஊசி மருந்து ரூ.3.7 லட்சம் என்பதால் கவலை :
நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு, 7 நிமிடங்களில் செலுத்தக் கூடிய, 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன ஊசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரபல மருந்து நிறுவனமான ரோச் ஃபார்மா இந்தியா ((Roche Pharma)), "டெசென்ட்ரிக்" ((Tecentriq)) என்ற பெயரில் "அடெசோலிசுமாப்" ((Atezolizumab)) என்னும் புற்றுநோய் ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஊசி, அதிக நேரம் எடுக்கும் கீமோதெரபி சிகிச்சையைப் போல் இல்லாமல் வெறும் 7 நிமிடங்களில் செலுத்தப்படுவதால், நோயாளிகள் மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையுமெனக் கூறப்படுகிறது.
விலங்குகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை :

அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்க, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க.
பூங்காவில், சிறப்பு நீர் ஊற்றுகள் மற்றும் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், வைட்டமின்கள் மற்றும் குளிர்ந்த உணவுகள் வழங்கி பாதுகாக்கப்படுகிறது.
அசாமில் சஃபாரி ஜீப்பைத் தாக்க முயன்ற காண்டாமிருகம் :

அசாமின் மானஸ் தேசியப் பூங்காவின் (( (Manas National Park))) பான்ஸ்பரி ((Bansbari ))பகுதியில், காண்டாமிருகம் ஒன்று, சஃபாரி ஜீப் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மானஸ் தேசியப் பூங்காவில், சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல், காட்டுப் பகுதிக்குள் சஃபாரி பயணம் மேற்கொண்டபோது, திடீரென எதிரே வந்த காண்டா மிருகம், ஆக்ரோஷமடைந்து தனது கொம்பால் ஜீப்பை மீண்டும் மீண்டும் முட்டி கவிழ்க்க முயன்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
100 CCTV பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் நடவடிக்கை :\

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் (( Chhatarpur)), சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சத்தர்பூரில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த சிறுமியை, 3 பேர் சேர்ந்து ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தொடர்ந்து அச்சிறுமியை, அங்குள்ள சத்ரசல் ((Chhatrasal)) சதுக்கத்தில் விட்டுச் சென்றுள்ளனர். தனியாக நின்ற சிறுமியை ரோந்து படையினர் மீட்டதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி,100 CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved