எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறானவர் அதிபர் டிரம்ப் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் காட்டமாக விமர்சித்துள்ளார். CREDAI மாநாட்டில் பேசிய அவர், உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர் தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை கேட்டுள்ளோமா? என வினவியதோடு, டிரம்ப் வழக்குத்திற்கு மாறானவர் என்றும் அவருடைய நடத்தையை வைத்து இந்தியாவின் செயல்திறனை மதிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ரஷ்யாவிடமிருந்து சீனா தான் அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும் ஆனால் இந்தியா மீதான வரிவிதிப்பு நியாயமற்றது என்றும் கூறினார்.