அமெரிக்கா அதிபர் வேட்பாளர் டிரம்பின் கோல்ப் மைதானம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட நபரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட நியானின் காரில் டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து கையால் எழுதிய அட்டவணை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது தாக்குதல் குறித்த குறிப்பை எழுதி வைத்துள்ள அவர், இந்த முயற்சியில் தான் தோற்றுவிட்டால் இந்த வேலையை செய்து முடிப்பவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி பணம் கொடுப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.