திருச்சூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு மறுத்த சிறுவனை கிணத்தில் மூழ்கடித்து கொன்ற கொடூரனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட மாலா பகுதியை சேர்ந்தவர் அஜீஸ். இவரது ஆறுவது மகன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார். இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், குளத்தில்சிறுவனின் சடலம் மிதப்பதாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன் 6 வயது சிறுவனின் உடலை கைப்பற்றினர்.இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், இளைஞர் ஒருவர் சிறுவனை அழைத்து சென்றது பதிவாகி இருந்தது, சிறுவனை அழைத்துச் சென்ற ஜோ ஜோ என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது கொலை குற்றவாளியான ஜோ ஜோ சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது. அதற்கு சிறுவன் மறுத்துள்ளதால், குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததை ஜோஜோ ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.