news-tamil-logo

3/21/2026, 6:38:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home bigstoriesnews தேர்தல் அறிவித்த பிறகு நிதி கேட்க முடியுமா?
tv

Also Watch

tv

Read this

தேர்தல் அறிவித்த பிறகு நிதி கேட்க முடியுமா?

TTV Dhinakaran

Posted on: Mar 21, 2026 03:46 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TTV Dhinakaran

அதிமுகவை எதிர்க்க தைரியம் இன்றி, ‘டில்லி அணி’ என, திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.டில்லி தலைமை உடன் பேச்சு டில்லி செல்லும் முன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியதாவது.

அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி, தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட உள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது, நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். எனவே, எங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவின் டெல்லி தலைமை, எங்களிடம் பேச்சு நடத்துகிறது.

காத்திருக்கும் தமிழக மக்கள் இந்த சந்திப்பு, நான்கு நாட்களுக்கு முன்பாக கிடைக்கப் பெற்ற அழைப்பை அடுத்தே நடக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை, இது அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி மட்டுமே. இதனை ஊடகங்கள் வாயிலாக முதல்வருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, மத்திய அரசிடம் எப்படி நிதியை பெற்றுத் தர முடியும்? கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து கிடைத்த நிதியை திமுக எப்படி சுரண்டியது? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவை அகற்ற வேண்டும் என்று வாக்குப்பதிவு நாளுக்காக, தமிழக மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

திசை திருப்புகிறார் முதல்வர் : 

அதிமுகவை எதிர்க்க தைரியம் இன்றி, ‘டெல்லி அணி’ என்று, முதல்வர் திசை திருப்ப பார்க்கிறார். இவர்கள் மத்தியில் இத்தனை ஆண்டு காலம் இருந்தும் தமிழக மக்களுக்கு என்று, என்ன செய்தார்கள்?

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, இலங்கை தமிழர்களை கொன்று குவிக்கும் போது, மத்தியில் அங்கம் வகித்து, வாய்மூடி மவுனம் காத்துவிட்டு, என்டிஏ கூட்டணி குறித்து பேச திமுகவினருக்கு தகுதி இல்லை. இவ்வாறு  டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Related Link
விருகம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் இபிஎஸ்

விருகம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் இபிஎஸ்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
1 hr 57 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved