Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 03:36 PM
By: Manigandan Raja

காரில் கண்டறியப்பட்ட சிலைகள் :
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட சங்கரன்பந்தல் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலர் புனிதவதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு ஐம்பொன் சிலைகள் இருந்தது கண்டறியப்பட்டது. ஒரு அடி உயரத்தில் இருந்த நடராஜர், சிவகாமசுந்தரி
சிலைகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் சிலைகளை எடுத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் செந்துரையைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சிலைகளை எப்பொழுதுமே கையிலேயே எடுத்துச் சென்று வழிபட்டு வருவதாகவும் மாதேஸ்வரன் தெரிவித்த நிலையில் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலைகளை தேர்தல் பறக்கும்படையினர் ஒப்படைத்ததை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தன்னிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாகவும் ஆவணங்களை சமர்ப்பித்து சிலையை மீட்டு செல்வேன் என்று மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved