Also Watch
Read this
Posted on: May 02, 2025 10:49 AM
By: Srini Vasan

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களுக்கு, உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாததால், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், கணினி ஆய்வகம் அமைப்பதற்காக தனது தொகுதி மேம்பட்டு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அது செலவிடப்படவில்லை என்பதில் இருந்தே சென்னை பல்கலைக்கழகத்தின் சீரழிவை உணர முடிவதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved