ஒடிஐ உலகக் கோப்பை வென்ற இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்க ஏற்பாடு செய்து வருவதாக ஐசிசி தலைவர் ஜெய்ஷா உறுதியளித்துள்ளார். காயம் காரணமாக கடைசி 2 போட்டிகளில் விளையாட முடியாமல் போனதால், பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்கப்படவில்லை. இருப்பினும் இந்தியாவுக்கு அதிக ரன்கள் குவித்த வீராங்கனைக்கு பதக்கம் இல்லையா என குரல்கள் எழுந்த நிலையில், தற்போது தனக்கான பதக்கம் வந்துக்கொண்டிருப்பாதாக பிரதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.