டெல்லியில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடர் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பல்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. புரோ கபடி லீக் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை அன்று, டெல்லியில் தொடங்கிய லீக் தொடரில் 2 போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. அதில், பெங்களூரு அணி 47- க்கு 26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் புனேரி பல்தான் அணியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 23-க்கு 36 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 7-வது தோல்வியாகும். புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் கடைசி இடத்தில் உள்ளது.