சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் 829 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள இந்திய வீரர் அபிஷேக் சர்மா, நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியுள்ள இவரது பேட்டிங் சராசரி 33 புள்ளி 43 என்ற விகிதத்திலும், ஸ்டிரைக் ரேட் 193 புள்ளி 84 ஆகவும் உள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் - 814 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் திலக் வர்மா - 804 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.