இந்திய அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென்ஸ்டோக்ஸ் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஒல்லி போப் அணியை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.