மக்கள் சக்தியின் துணையோடு, மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம் என்றும், 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் எனவும் தவெக தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நாளை ஒட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்ட விஜய், தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும், 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என்றும், தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.