471 நாட்கள் சிறைவாசம் முடித்து திரும்பியுள்ள செந்தில் பாலாஜி, முன்பை விட கட்சிப் பணியை சிறப்பாக ஆற்றக்கூடிய ஆற்றலோடு காணப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள மாரிஸ் ஹோட்டலில் தங்கியிருக்கும் செந்தில்பாலாஜியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறைவனும் இயற்கையும் செந்தில் பாலாஜிக்கு துணை நிற்கட்டும் என்றார்.