பழநி முருகன் கோவில் தக்காராக இருக்கும் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவன இயக்குநர் ராஜசேகரனை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர் திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை உறுதி செய்த பின்னரே, ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் மீது ஆந்திரா அரசு வழக்கு தொடர்ந்ததாக கூறினார்.