news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்
tv

Also Watch

tv

Read this

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்

சி டி ஆர் நிர்மல் குமார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சி டி ஆர் நிர்மல் குமார் 2

குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் : 

உசிலம்பட்டி ஏழுமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் அவர்களுக்கு நிவாரணம் உதவி வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து அவர் கூறும்போது:

நேற்று உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவர் குடும்பத்தை சந்திப்பதற்காகவும் நிவாரணம் வழங்குவதற்காகவும் வந்திருக்கிறேன்.

உயிரிழந்தவர்களுக்கு நான்கு லட்ச ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தயாராக உள்ளது அவர்களை சந்தித்து வழங்க உள்ளேன். மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என துணை முதல் அமைச்சர் டிகே சிவகுமார் பேசி வருவது குறித்த கேள்விக்கு: எந்த காலத்திலும் நமது முதல்வர் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டார்.

அதற்கு தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுப்போம்.

திமுக ஓனர் மற்றும் விசிகவினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் குறித்த கேள்விக்கு:

திமுகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் அழுத்தத்தில் உள்ளனர். ஐந்து வருடமாக அவர்கள் மக்கள் விரோத செயல்கள் செய்ததால் தான் மக்கள் அவர்களுக்கு பதிலை கொடுத்திருக்கிறார்கள். இப்போது எங்களுடன் உள்ள கூட்டணி கட்சியினருடன் பிரச்சனை செய்து தேவையில்லாத தகராறு செய்து இன்றைக்கும் திமுக காரர்கள் மக்கள் விரோத செயல்களை தான் செய்து வருகிறார்கள்.

அரசுக்கு எந்த வகையிலாவது குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் மக்களுக்கு இது தெரியும் அனைத்தும் கலை எடுக்கப்பட்டு மக்களுக்கான செயல்பாடுகளை மட்டும் நோக்கமாக கொண்டு வேலைகள் தொடங்கும்.

அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் தாவுக்காவுக்கு வருவது குறித்த கேள்விக்கு: அது அவங்களுடைய உட்கட்சி பிரச்சனை அதை நாங்கள் பேச வேண்டியதில்லை. தலைமை மீது
அதிருப்தி ஏற்பட்டு ராஜினாமா செய்தால் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு. ராஜினாமா செய்து விட்டு வருபவர்கள் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சேர்பவர்களை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.


மின்சாரத் துறையில் நிறைய ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்கிறீர்கள் நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் குறித்த கேள்விக்கு:

எங்கெல்லாம் ஊழல் நடைபெற்றதோ அங்கெல்லாம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பிரச்சனைகளை கண்டறிந்து சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எடுக்கப்படும். மக்கள் பணத்தில் மக்களுக்கான நிறுவனத்திலோ யாரும் தவறு செய்தால் அதற்கான சட்டபூர்வமான
நடவடிக்கை இருக்கும்.

சட்டத்துறை சம்பந்தமாக இன்று நடைபெற்ற ஆலோசனை கொடுத்த கேள்விக்கு: சட்டக் கல்லூரி குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனம் மாவட்ட
வழக்கறிஞர் நியமனம் குறித்த ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

சட்ட ஆணையம் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டி உள்ளது. அரசு சட்டக் கல்லூரி மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் தவறான விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதற்கும் சோகாஷ்
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு இடங்களையும் அவர்களை நிரப்பியுள்ளனர் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்த பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை

0
58 mins agoshare
தள்ளுபடி செய்ய கோரிக்கை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved