இன்று தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பையில இந்தியா மொத்தம் 4 லீக் போட்டிகள்ல விளையாடுறாங்க. லீக் போட்டிகள் இன்று தொடங்கினாலும், இந்தியாவுக்கான முதல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கு. முதலில் நியூசிலாந்து அணிய எதிர்கொள்ளும் இந்திய மகளிர் அணி, 6ம் தேதி நடைபெற இருக்கும் 2வது லீக் போட்டியில பாகிஸ்தான் அணியையும், 9ம் தேதி இலங்கை அணியயும் எதிர்கொள்ள இருக்காங்க. 13ம் தேதி நடக்க இருக்கிற கடைசி லீக் போட்டியில ஆஸ்திரேலிய அணிய இந்திய அணி எதிர்கொள்ள இருக்காங்க.