Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 05:55 AM
தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார். அடுத்ததாக மத்திய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என்றும் உறுதி கூறி உள்ளார்.
விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு;
தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.
கீழடி ஆய்வறிக்கை
அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
தமிழர் தாய்மடி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடியை "தமிழர் தாய்மடி" எனப் போற்றி, அங்கு 24.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 67,348 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை பிப்ரவரி 13, 2026ல் திறந்து வைத்தார்.
கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்ட போராட்டம் ஓயாது எனவும் தெரிவித்து வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved