நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின், டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.