news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news துரோகிகளை அடையாளம் காட்டியுள்ளது - மு.க.ஸ்டாலின் வீடியோ
tv

Also Watch

tv

Read this

துரோகிகளை அடையாளம் காட்டியுள்ளது - மு.க.ஸ்டாலின் வீடியோ

பெண்களுக்கு என்னுடைய Salute

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தொகுதி மறுவரையறை விவகாரத்தில், நண்பர்கள் யார்? துரோகிகள் யார்? யார்? என்பதை அடையாளம் காட்டியுள்ளது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

முதல்வர் வெளியிட்ட வீடியோ
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது;
புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாக பேசுகிறது; நமது வெற்றி தொடரட்டும். தொகுதி மறுவரையறை என்ற கருப்பு சட்டத்திற்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றம் வரை தீ பரவியது
தொகுதி மறுவரையறை என்ற கருப்பு சட்டத்திருத்த நகலை எரித்து தீ பரவட்டும் என சொன்னேன், அது நாடாளுமன்றம் வரை பரவியது. பாஜகவுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட கருப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்த அனைவருக்கும் நன்றி. தொகுதி மறுவரையறை விவகாரத்தில், நண்பர்கள் யார்? துரோகிகள் யார்? யார்? என்பதை அடையாளம் காட்டியுள்ளது

பெண்களுக்கு என்னுடைய Salute
பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற மாறுவேடத்தில் பாஜக கொண்டுவந்த ஏமாற்று திட்டத்தை முன்னின்று தோற்கடித்தது பெண்கள்தான். தொகுதி மறுவரையறைக்கு எதிராக முழுக்க முழுக்க என்னுடன் நின்ற தமிழ்நாட்டு மக்களுக்குதான் முதல் நன்றி. இந்தியா கூட்டணி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றாக சேர்ந்து நின்றதுதான் இந்த வெற்றிக்கு காரணம்.


இதுதான்டா திமுக
12 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்த மசோதா முதன்முறையாக தோல்வியடைந்துள்ளது. வடக்கு, தெற்கு என நமக்குள் பிளவு ஏற்படுத்தி சண்டையிட வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடி. பழைய திமுக என்றால் என்ன என கேட்ட அரைவேக்காடுகளுக்கு இதுதான்டா திமுக என நேற்று காட்டியிருக்கிறோம்
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.


Related Link
தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA - மு.க.ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA - மு.க.ஸ்டாலின்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 54 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved