news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமே தவிர, டெல்லியில் இருந்து எவரும் ஆளக்கூடாது என ராகுல் காந்தி பரப்புரையின் போது தெரிவித்தார். ஊழலில் திளைக்கும் பயத்தால் பாஜகவிடம் அதிமுக சரணாகதி அடைந்துவிட்டதாகவும் சாடினார். தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும், மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தமிழர்கள், வெறுப்பு அரசியலின் சதித்திட்டத்தை தூள் தூளாக்குவார்கள் என்றும் ராகுல்காந்தி பேசினார்.

கன்னியாகுமரியில் ராகுல்காந்தி
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில், விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான 25 பேருக்கு இரங்கல் தொிவித்து தனது பிரச்சார உரையை தொடங்கிய ராகுல் காந்தி பேசியதாவது;

* மொழி, கலாச்சாரத்தில் வேறுபட்ட நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தவே நடைபயணம் மேற்கொண்டேன்
* இந்தியா என்பது பன்முகத்தன்மையை போற்றி பாதுகாக்கும் அரசியல்

* எப்போது நான் தமிழகம் வந்தாலும் காமராஜரை நினைவு கூருகிறேன், அவரது கல்விப்பணிகள் மிகச்சிறப்பானது
* தமிழனாக பிறக்கவில்லை அவ்வளவு தான், ஆனால் தமிழ் மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்க பாடுபடுகிறேன்

* தமிழா்களின் அரசியல் வரலாறு என்பது சமூக நீதியை முன்னிறுத்தியது
* தமிழ்நாட்டில் தான் மதிய உணவு திட்டம், பெண்களுக்கான சட்டங்கள் முதலில் நிறைவேற்றப்பட்டது
* எங்களது கூட்டணி ஆட்சியில் உாிமைத் தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தொடரும்

* அமைதியாக இருந்த மணிப்பூா் மாநிலம் இன்று சின்னாபின்னமாகி இருப்பதற்கு பாஜக தான் காரணம்
* தமிழா்களை சரணடைய வைக்க முடியாது என்பதால் அதிமுக மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறது பாஜக

* இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத்தை சோ்ந்தவர்களால் ஆளப்பட வேண்டும்
* பாஜக கூட்டாட்சி தத்துவத்தை பலவீனமாக்க நினைக்கிறது, டெல்லியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை ஆள நினைக்கிறது

* இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் பின்னாலும் ஒரு வரலாறு உள்ளது, அவை இலக்கிய பொக்கிஷம்
* தமிழ் மொழியை போல் கன்னடம், மலையாளம் என ஒவ்வொரு மொழிக்கும் வரலாறு, கலாச்சாரம் உள்ளது

* தனிப்பட்ட மொழியின் கலாச்சாரம் யாராலும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது, எல்லா மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்
* ஒரே நாடு ஒரே மொழி ஒரே வரலாறு என அனைத்தையும் ஒற்றை அரசியலுக்குள் அடக்க நினைக்கிறது பாஜக
இவ்வாறு பேசி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார்.

Related Link
தாலி கட்டிய கையோடு விஜய்யிடம் ஆசி வாங்கிய மணமக்கள்

தாலி கட்டிய கையோடு விஜய்யிடம் ஆசி வாங்கிய மணமக்கள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
39 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved