news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பஞ்சாப் அணியிடம் போராடி தோற்ற லக்னோ
tv

Also Watch

tv

Read this

பஞ்சாப் அணியிடம் போராடி தோற்ற லக்னோ

இன்று குஜராத் VS மும்பை

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி அதிரடி ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

5 போட்டிகளில் வென்று பஞ்சாப் அணி முதலிடம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதேசமயம் நேற்றைய லீக் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் லக்னோ அணி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 155 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி மட்டும் 28 பந்துகளில் 46 ரன்களை அடித்தார்.

பின்னர் ஆடிய கேகேஆர் அணியில் டிம் மற்றும் ரஹானே டக் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தனர். கிரீன் மற்றும் பவல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் வந்த ரிங்கு சிங் 34 பந்துகளில் 53 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். 19.4 ஓவர்களில் கேகேஆர் அணி 161 அடுத்து இலக்கை அடைந்தது.

"சிஎஸ்கே ஒரு அணியாக இன்னும் முன்னேறவில்லை"

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அணியாக இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்றும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருப்பதாகவும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வேதனை தெரிவித்தார். இனி வரும் போட்டிகளில் சென்னை அணியில் வீரர்கள் முற்றிலும் செயல் திறன் அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார். தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் கோப்பை கனவு தகர்ந்துவிடும் என்றும் பிளமிங் கருத்து தெரிவித்தார்.

குஜராத் VS மும்பை
IPL கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Link
ஆர்சிபி வீரர் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் சாதனை

ஆர்சிபி வீரர் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் சாதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
39 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved