news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

செம்மஞ்சேரி, செங்கல்பட்டு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னையில் உதயநிதி

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரியுங்கள் :

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். அரவிந்த்ரமேஷை ஆதரித்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியின் பிரதான சாலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

20 நாட்களாக 120 சட்டமன்ற தொகுதிக்கு நேரடியாக சென்று அங்க இருக்கக்கூடிய அண்ணன் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன். இங்கு அரவிந்த் ரமேஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி
பெற செய்ய வேண்டும் என வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

24 மணி நேரமும் உழைக்க கூடியவர் அண்ணன் அரவிந்த் ரமேஷ் அவர்கள். அரவிந்த் ரமேஷ் அவர்களுக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 66.5 கோடி மதிப்பீட்டில் பெரும்பாக்கம் பகுதியில் சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

58 பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு பகுதியில் மழைநீர் செல்லும்படி மழைநீர் வடிகால்வாய் அமைத்துள்ளனர். 1338 கோடி மதிப்பீட்டில் மண்டலம் 14, 15 பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுள்ளது.
வரும் 23ம் தேதி வாக்குசவாடி சென்று முதல் இடத்தில் உள்ள உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்தில் வைக்க வேண்டும்.

இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது. தமிழ்நாட்டில் அடிமை கூட்டத்தையும், சங்கி கூட்டத்தையும் நுழைய விட்டுட கூடாது என்று கூறி வீடு வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள். ஒன்றிய பாஜக அரசு நமக்கான எந்த நிதியும் தரவில்லை.

போன பட்ஜெட்டில் தமிழ்நாட்ட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மோடியின் ஒண்ணா நம்பர் முரட்டு அடிமை எடப்பாடி. இந்த முறை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதி. கடந்த முறை அரவிந்த் ரமேஷ் வாங்கிய வாக்குகளை விட இந்த முறை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

வீடு வீடாக சென்று திமுகவினர் சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரியுங்கள் என்று பேசி பரப்புரையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடித்துக் கொண்டார்.

Related Link
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரில் நடந்தது என்ன? - வெளியானது அதிர்ச்சி வீடியோ

1
12 mins agoshare
கரூர் மாவட்ட செய்திகள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved