தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தளபதி கச்சேரி' லிரிக் வீடியோ வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என கூறப்படும், இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலில் அரசியல் நெடி பறக்கிறது. இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியும், இசையமைப்பாளர் அனிருத், விஜய் உடன் இணைந்து பாடியுள்ளார். ’தளப தீ கச்சேரி...’ எனத் தொடங்கும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் விஜய்-ன் அரசியல் வருகையை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.இதையும் பாருங்கள் - தளபதி கச்சேரி கலக்கலா? சொதப்பலா? அரசியல் வரிகள், குறியீடுகள் வேறென்ன? | Jananayagan First Single