சொல் பேச்சை கேட்கவில்லை என கூறி பெற்ற மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கிய அரக்க குணம் கொண்ட தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், அவரது 10 வயது மகளை கயிற்றால் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.இதனை பொருத்துக்கொள்ள முடியாத அக்கம்பக்கத்தினர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பரவ விட, வீடு தேடி வந்த போலீசார் கொடூர தந்தையை கைது செய்துள்ளனர். மழலை குணம் மாறாத மகள், சொல் பேச்சை கேட்கவில்லை என தந்தை செய்த செயலின் வீடியோ இணைவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.