கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வீட்டின் சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.கொல்லம் மாவட்டத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு காரில் சென்றனர்.கைப்பட்டூர் என்கிற இடத்தில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச் சுவரில் மோதி கவிழ்ந்தது.இதைக் கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த 6 மாத கைக்குழந்தை உட்பட அனைவரும் காயமின்றி தப்பினர்.