இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு THE WONDERMENT என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரத்யேக வீடியோவுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் கோடையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.