அமலாக்கத்துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளத்திராணி இல்லாத பாஜக, அமலாக்கத்துறையை வைத்து அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.