தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் மாநில தகுதித் தேர்வு வருகின்ற மார்ச் மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.