இப்பலாம் வெள்ளித்திரை போல சின்னத் திரை நடிகைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்குனு சொல்லாம். அந்த அளவுக்கு சினிமா ஜோடிகளுக்கு இணையாக சின்னத்திரை ஜோடிகளின் காட்சிகளும் சினிமா பாடல்களுடன் இணையத்தில் உலா வருவதால், இளம் தலைமுறையினர் அதற்கு வரவேற்பளித்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்துறையில் பணியாற்றிய சிறந்த பெண்கள் யார் என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர், தொடர் நாயகி, குணச்சித்திர நடிகை, நகைச்சுவை நாயகி என பல பிரிவுகளில் சின்னத் திரையில் பணியாற்றி வரும் பெண்களில் சிறந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.இவர்களுக்கான விருதுகளை எஸ்.எஸ் மியுசிக் நிறுவனம் வழங்கி சிறப்பித்துள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த குழுவினரே தேர்வு செய்து சின்ன திரையில் நடித்து வருபவருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பெண்கள் விருதை வழங்கியுள்ளது.அந்த வகையில் யாரெல்லம் விருதை பெற்று இருக்காகனு பார்க்கலாம். பிரியங்கா தேஷ்பாண்டே, சைத்ராரெட்டி, லட்சுமி பிரியா, நிகிதா ராஜேஷ், நிரோஷா, கோமதி பிரியா , சல்மா அருண், ஜாக்குலின் உள்ளிட்ட நடிகைகள் பெற்றுள்ளனர். இவர்கள் சின்ன திரையில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் , தங்கள் பணிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்ததற்காகவும் இவர்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த பெண்கள் விருதை எஸ்.எஸ் மியுசிக் நிறுவனம் வழங்கியுள்ளது. இதையும் படியுங்கள் : சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்.. இனி டிராஃபிக்கே இருக்காது.. இணையும் முக்கிய சாலைகள்