சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக நீலாங்கரையை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே நகரின் (OMR-ECR) இணைப்பு இரும்பு பாலம் கட்டும் பணி இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகள் துவங்கப்பட்டு பலகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் தற்போது இத்திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது . இப்பணிக்காக 1000 கோடி செலவில் உருவாக உள்ள திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே மாறும் என்றும் ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போதுஉள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதன் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது.. 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும் என கூறப்படுகிறது. இதனால், எண்ணூரில் இருந்து புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்றும், இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது..