news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திட்டமிட்டபடியே ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு
tv

Also Watch

tv

Read this

திட்டமிட்டபடியே ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

1 - 3ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்து உள்ளார்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் கூறி உள்ளார்.

தலைமைச் செயலகத்தில்...
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் உடனான சந்திப்புக்குப் பிறகு, அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

* கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

* நான்காம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

* ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

* ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகிறது.

* ஜூன் 1 முதல் புதிய பாடத்திட்டம் தொடர்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, புதிய பாடத் திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

Related Link
அடுத்தாண்டு முதல் ஆன்-லைனில் நீட் தேர்வு

அடுத்தாண்டு முதல் ஆன்-லைனில் நீட் தேர்வு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மும்மொழி கொள்கையை ஸ்டாலின் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை

0
0 min agoshare
திமுக அணி வெற்றி பெறும்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved