பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டும் சசிதரூர் தங்களில் ஒருவர் அல்ல என கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் முரளீதரன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எந்த நிகழ்ச்சிக்கும் சசிதரூரை அழைப்பதில்லை எனவும், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் எனவும் விளக்கமளித்தார்.