ஆஸ்திரேலியாவின் தீவு மாவட்டமான டாஸ்மேனியாவிற்கு (( Tasmania )) சுற்றுலா சென்றுள்ள நடிகை சானியா அய்யப்பன் அங்கு பனி மழையில் நனைந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மலையாள திரைத்துறையில் அறிமுகமாகி, இறுகப்பற்று படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த நடிகை சானியா அய்யப்பன், அவ்வப்போது உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற சானியா அய்யப்பன் அங்கு பனி மழையில் நனைந்த வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் இதய எமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.