Also Watch
Read this

அதிக நாட்களாக பிரதமராக பணியாற்றிய சாதனையை, பிரதமர் மோடி படைத்துள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தமாக 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார். இருப்பினும், இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் தடையின்றித் தொடர்ந்து பதவியில் நீடித்தது 4,398 நாட்கள் ஆகும். இந்த நிலையில், நேருவின் சாதனையை முறியடித்து, இந்திய வரலாற்றிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூன் 10ஆம் தேதி படைத்துள்ளார்.

12 ஆண்டுகள் நிறைவு
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்தியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ள நிலையில் இந்த சாதனை நிகழ்ந்து உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மொத்தம் 14 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரதமராக இருந்த போதிலும், அவரது ஆட்சி தடையற்ற தொடர்ச்சியான ஆட்சியாக இருக்கவில்லை. ஆனால், தற்போதைய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல் வெற்றிகள் மூலம் தொடர்ந்து தடையின்றி ஆட்சியில் நீடித்து வருகிறார்.

மக்களின் நம்பிக்கை
இந்த சாதனை குறித்து பிரதமர் மோடி பதிவிட்டு இருப்பதாவது;
மக்களுக்கு செய்யும் சேவையே நல்லாட்சியின் உண்மையான அளவு கோலாகும். பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வுடன் செயல்படுபவர்களால் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.

பிரதமருக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் வாழ்த்து
இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் எழுந்து நின்று கை தட்டியும் மேசைகளில் ஒலி எழுப்பியும் வாழ்த்து தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved