news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கன்னிமாரா தோப்பு ஓடையில் நீர் வரத்து அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

கன்னிமாரா தோப்பு ஓடையில் நீர் வரத்து அதிகரிப்பு

நெல்லை - கன்னிமாரா தோப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கன்னிமாரா தோப்பு

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள குத்திர பாஞ்சன் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அருவியில் நீர் வரத்து அதிகமாகியுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அருகே உள்ள கன்னிமாரா தோப்பு ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.


பணகுடி குத்திரபாஞ்சானில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னிமரா தோப்பு ஓடையில் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

இந்த சீசனை அனுபவிக்கும் விதமாக மழை சாரலில் நினைந்த படியே சுற்றுலா பயணிகள் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடுவதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நலன் கருதி போலீசார், மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நீர் வரத்து அதிகளவில் வர தொடங்கினால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கன்னிமாரா தோப்பு ஓடையிலும் அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Related Link
அம்மா மருந்தகத்தில் நுழைந்து தவெக நிர்வாகிகள் ஆய்வு

அம்மா மருந்தகத்தில் நுழைந்து தவெக நிர்வாகிகள் ஆய்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
27 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved