news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews விஜய்யின் மகன் இயக்குநர் ஜேசன் சஞ்சய் வெளியிட்டார்
tv

Also Watch

tv

Read this

விஜய்யின் மகன் இயக்குநர் ஜேசன் சஞ்சய் வெளியிட்டார்

சிக்மா

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிக்மா

"சிக்மா ஸ்டைல்" பாடலின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு :

"சிக்மா" திரைப்படத்தின் "சிக்மா ஸ்டைல்" பாடலின் படப்பிடிப்பு வீடியோவை முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து வரும் இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு :

"ஸ்லம் டாக்" திரைப்படம் அனைத்து மொழிகளின் ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது, படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ் மற்றும் நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் "மண்டாடி" திரைப்படம் : 

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் "மண்டாடி" திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எல்ரட் குமாரின் ஆர்.எஸ்.இன்போ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் விக்ரமின் "சீயான் - 63" திரைப்படம் :

நடிகர் விக்ரமின் "சீயான் - 63" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரமின் 63-வது திரைப்படமாக உருவாகும் இதை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக விக்ரம் உடலை கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் ரியா ஷிபு நாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Related Link
'முதல் மரியாதை'க்கு முழு 'அரசு மரியாதை' - முதல்வர் விஜய் அறிவிப்பு

'முதல் மரியாதை'க்கு முழு 'அரசு மரியாதை' - முதல்வர் விஜய் அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
1 hr 40 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved