Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழக அரசு சார்பில் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கபடும், முட்டைகளை ஆட்டையை போட்டு ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து வந்த பொருப்பாளர் (அரசு ஊழியர்) வசமாக
சிக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருவதால் பெற்றோர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணபட்டு ஊராட்சி கோ.சத்திம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருவதாகவும், இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் என 547 பயின்று வருவதாக கூறபடுகிறது.
இந்த பள்ளியில் அருணாச்சலம் என்பவர் பொறுப்பாளராகவும், இரவு நேர காவல் பணியாளராக பாலமுருகன் என்பருவம் பணிபுரிந்து வருகின்றதாக கூறப்படுகிறது மேலும் பள்ளி நாட்களில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், வழங்கபடும் சத்துணவு முட்டைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் பொருப்பாளர் அருணாச்சலம் மற்றும் பாலமுருகன் ஆகியோர் 547 மாணவ மாணவிகளுக்கு வழங்கபட வேண்டிய முட்டையில் 330 மாணவ மாணவிகளுக்கு மட்டுமே
முட்டைகளை வழங்கி வருவதாக குற்றசாட்டு இருந்த நிலையில், மீதமுள்ள முட்டைகளை ஹோட்டல்களில் விற்பனை செய்ய எடுத்து சென்ற போது கையும் கலவுமாக பெற்றோர்கள்
சிலரிடம் இருவரும் வசமாக சிக்கி கொண்டனர்.
அதனை தொடர்ந்து அவர்களிடம் பெற்றோர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின்
பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved