news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுற்றி திரியும் மாடு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உரிமையாளர்கள் பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளிட்டவையை அவிழ்த்து விட்டுவதன் காரணமாக முக்கிய சாலைகளிலின் நடுவே நின்று கொண்டும் படுத்து கொண்டும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதுஎன அச்சம் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே செல்லும் பாதையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயணிக்கின்றனர்.


இந்த நிலையில் இன்று பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி முடிந்து பயணிக்கும் போது திருப்பத்தூர் நகர பகுதிகளில் உரிமையாளர்களால் அவிழ்த்து விடும் மாடுகள் பள்ளி மாணவ மாணவிகளை இடிப்பது போல் துரத்தி செல்லும் நிலமை ஏற்பட்டது.

ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செக்யூரிட்டிகளும் இதனை கண்டு கொள்வதில்லை அதேபோல நகராட்சி நிர்வாகத்தினரும் இதனை கண்டு கொள்ளாமல் செயல்படுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே மாடுகள் ஆக்கிரமிப்பு செய்து அந்த வழியாக பயணிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் மாடுகள் பயமுறுத்துகின்றன.

எனவே மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுதுள்ளது.

Related Link
பொறுப்பாளர் முட்டைகளை எடுத்து சென்ற வீடியோ

பொறுப்பாளர் முட்டைகளை எடுத்து சென்ற வீடியோ

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
1 hr 37 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved