Also Watch
Read this
By: Manigandan Raja
கொடுங்கள், கொடுங்கள் என்று எவ்வளவு கேட்டாலும் தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அரசு கொடுத்தது வெறும் ஜீரோதான் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய திட்டங்கள் கை நழுவி போனதற்கு திமுக அரசுதான் காரணம் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"திட்டமிட்டு நிதி நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது"
திட்டமிட்டு தமிழ்நாடு அரசை நிதி நெருக்கடிக்கு ஆளாக்குவதாக மத்திய பாஜக அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார். சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், பழைய ஓய்வூதிய திட்டம் பறிபோக விட்டு, அரசு ஊழியர்களின் கண்களில் ரத்த கண்ணீர் வரவழைத்ததாக அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

"திட்டங்கள் கைநழுவி போவதற்கு திமுக அரசுதான் காரணம்"
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய திட்டங்கள் கைநழுவி போவதற்கு திமுக அரசுதான் காரணம் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோது திமுக கேட்டுப்பெற்ற நிதி மற்றும் திட்டங்கள் எவ்வளவு என கேள்வி எழுப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved